தக்கலை மதுவிலக்கு போலீசார் தோட்டியோடு, நுள்ளிவிளைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி, அவரை சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட அரை கிலோ கஞ்சா பாக்கெட் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில். அவர் சுங்கங் கான் கடை பகுதி சேர்ந்த ஜான்ரோஸ் (44) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலத்தை திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த முத்துராமன் ( 31) என்பவரிடமிருந்து வாங்கியது வெளிவந்தது.
இதையடுத்து ஜான்ரோஸ் அழைத்துக் கொண்டு மதுவிலக்கு போலீசார் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று முத்துராமனை வரவழைத்து அவரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சா பாக்கெட் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி, இருவரின் வங்கி கணக்குகளை முடக்கும் பணியையும் போலீசார் தொடங்கியுள்ளனர்.