கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அந்த மனு தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொண்டார். இதேபோல ஒவ்வொரு போலீஸ் சரகங்களுக்கு உட்பட்ட மனுகளை அந்தந்த சரக போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வாங்கி விசாரணை மேற்கொண்டனர். முகாமில் நாகர்கோ வில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை சூப்பிரண்டு சந்திரசேகரன், குற்ற பிரிவு துணை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.