தக்கலை அருகே பறைக்கோடு பகுதியில் கன்னிமூல கணபதி கோயில் உள்ளது. கடந்த 15ஆம் தேதி இந்த கோயிலுக்குள் புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து அதில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய் கொள்ளை அடித்து தப்பி சென்றார். அந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக கோயில் பொருளாளர் கோயில் நிர்வாகி ஐயப்பன் என்பவர் தக்கலை போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி பறைக்கோடு ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயிலில் அதிகாலை 2 மணிக்கு புகுந்த நபர் அங்கிருந்த 4 உண்டியலை உடைத்து ரூபாய் 5000 மேற்பட்ட பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இது குறித்தும் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள சி சி டிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்தபோது இரண்டு கோயில்களிலும் திருடியது பள்ளியாடி பகுதி தங்கமணி என்ற ஜேம்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தக்கலை போலீசார் இன்று (அக்.,24) காலை தங்கமணியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.