குமரி: பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் இலவச வேஷ்டி சேலைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கி வருகிறது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் வேஷ்டிகள் தயாரிக்கப்பட்டு, தற்போது பார்சல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு...

திருவிதாங்கோடு:   ஜமா- அத் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜமாஅத் செயலாளர் சையது முகமது அஸ்லாம் (46) என்பவரை, நிலத்தகராறு காரணமாக ஷேக் முகமது (58) என்பவர் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஜமாஅத்துக்கு சொந்தமான நிலத்தை ஷேக் முகமது விற்பனை செய்ததாகவும், அதை மீட்க நிர்வாகிகள் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தின்...

அருமனை: பணிக்குச் சென்ற  காவல் எஸ்எஸ்ஐ மாயம்

குழித்துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47) கடந்த 31ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சிமி (45) தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் லட்சுமணன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அருமனை...

மீனச்சல்: ஶ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில் அஷ்டமி ரோகிணி திருவிழா

களியக்காவிளை அருகே மீனச்சலில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் இந்த ஆண்டு அஷ்டமி ரோகிணி திருவிழா இன்று, 10-ம் தேதி, காலை மஹா கணபதி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. நாளை மஹா மிருத்யுஞ்சய ஹோமம், நாராயணிய பாராயணம் மற்றும் சமய கருத்துரை நடைபெறும். நிறைவு நாளான...

விரிகோடு: ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு ; மக்கள் எதிர்ப்பு

கிள்ளியூர், விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய பாதைக்கு பதிலாக மாற்றுப் பாதையில் அமைக்க அரசாணை பிறப்பித்ததை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி பமலா தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்...

கொல்லங்கோடு: கல்லூரி மாணவி மீது கழிவு நீர் ஊற்றிய தம்பதி

நித்திரவிளை பகுதியை சேர்ந்த பிரைட் என்பவர் செங்கவிளை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவரது மகள் அபினயா (20) கல்லூரி மாணவி. கடந்த 7ஆம் தேதி, ஹோட்டல் முன்பக்கம் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, இடத்தின் உரிமையாளர் சுனில் குமார் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோர் தகாத வார்த்தை...

நித்திரவிளை: சாலையில் தடுமாறி விழுந்த மீனவர் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்த 65 வயது மீன்பிடி தொழிலாளி வர்கீஸ், நேற்று முன்தினம் இரவு சின்னத்துறை சாலையில் நடந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்...

வடிவீஸ்வரத்தில் கொலு பொம்மை விற்பனை ஆரம்பம்

வரும் 22ஆம் தேதி துவங்கவுள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு, வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை ஒட்டி, வடிவீஸ்வரம் பெரிய தெரு நடைபாதை கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

குளச்சல்: திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் திமுக இளைஞர்களுக்கு சமூக வலைத்தள பயிற்சி முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்திசன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சமூக...

குளச்சல்: கடற்கரையில் சூரிய அஸ்தமனம் காண குவிந்த மக்கள்

குளச்சல் கடற்கரையில் நேற்று ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் சூரியன் மறையும் அழகை கண்டு களிக்க குவிந்தனர். குடும்பத்துடன் மணற்பரப்பில் அமர்ந்து உரையாடினர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடலுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. கடற்கரை பரப்பில் அமர்ந்து கடல் அழகை ரசித்து சென்றனர்.