மார்த்தாண்டம் சிங்கிளேயர் தெருவை சேர்ந்தவர் பிஜி ஜோசப் (50). பொறியாளர். இவர் வீட்டின் மாடி அறையை தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வங்கியில் ஆஷா (32) என்பவர் ஊழியராக வேலை செய்தாராம். தற்போது அந்த வங்கி திவால் ஆனதால் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. நேற்று அங்கு வந்த ஆஷா தனது சம்பளம் தரவில்லை எனக் கூறி உள்ளே புகுந்து அங்கிருந்த கண்ணாடிகளை சேதப்படுத்தி, கம்ப்யூட்டர் பொருட்களை எடுத்துச் சென்று விட்டார். பிஜி ஜோசப் புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆஷாவை கைது செய்தனர்.