மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் நாராயண வடிவு இவரது மகள் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நாகர்கோவில் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடமாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.