நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மணிலி – பாத்திமா நகர் – பெருங்குளம் சாலை சீரமைக்க ரூ. 1 கோடியே 20 லட்சத்து 21,356 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று பாத்திமா நகர் பகுதியில் வைத்து ராஜேஷ் குமார் எம்எல்ஏ பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், நடைக்காவு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெங்கின்ஸ், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.