கிள்ளியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெப்ரிமோள் தலைமையில் நித்திரவிளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் பாரில் நேற்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தரக்குறைவான தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து 300 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 60 தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவற்றை அழித்தனர். பின்னர் பார் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.