Google search engine
நடப்பு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், ஆர்சிபி தொடக்க வீரர் ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. சால்ட் வெறும் 36 பந்துகளில் 78...
டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் ஆட்​டத்​தில் பந்​து​வீச கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்டதற்​காக சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நேற்று முன்​தினம் சிஎஸ்​கே- டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்தப் போட்​டி​யின்​போது, சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி வீரர்​கள் குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் ஓவர்​களை வீசி முடிக்​க​வில்​லை. இதனால் அணி...
சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏஜிஓஆர்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியை வீழ்த்தியது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் ரக்சில் (2-வது நிமிடம்), ஹலிசோ (8-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். வருமான வரித்துறை அணி சார்பில் நரேஷ்,...
“என் மகனின் கிரிக்கெட் பயணத்துக்காக வீட்டை விற்றேன்” என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் முகுல் சவுத்ரியின் தந்தை தலிப் சவுத்ரி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடனான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ வீரர் முகுல் சவுத்ரியின் பங்கு மிக முக்கியமானது. 27 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசி இருந்தார்....
ஐபிஎல் 2026 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது; பில் சால்ட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். விராட் கோலி (32) நிதானமாக ஆட முயன்ற போதிலும், ரவி பிஷ்னோய்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்​ஸ், டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுடன் மோதுகிறது. தொடக்க வீரர்​களான சஞ்சு சாம்​சன், ருதுராஜ் கெய்க்​வாட் ஆகியோர் நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கின்​றனர். ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் தோல்​வியடைந்​துள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது...
ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான டி.நடராஜன் நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி​யில் விளை​யாடி வருகிறார். இந்த சீசனில் அவர், 3 ஆட்​டங்​களில் விளையாடி 4 விக்​கெட்​களை கைப்​பற்றி உள்​ளார். ஓவருக்கு சராசரி​யாக 7.9 ரன்​களை விட்டுக்கொடுத்துள்ளார். டெல்லி அணி தனது 4-வது ஆட்​டத்​தில் இன்று சிஎஸ்கேவுடன் சேப்​பாக்​கம் மைதானத்​தில் விளை​யாட உள்​ளது. இந்த போட்​டியையொட்டி நேற்று நடை​பெற்ற பத்திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது டி.நட​ராஜன் கூறிய​தாவது:...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் லக்​னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. 182 ரன்​கள் இலக்கை துரத்​திய லக்னோ அணி கடைசி பந்​தில் த்ரில் வெற்​றியை வசப்​படுத்​தி​யது. இந்த அணி​யில் அணி​யின் இளம் பேட்​ஸ்​மே​னான 21 வயதான முகுல் சவுத்​ரி​யின் அதிரடி ஆட்​டம் முக்​கிய பங்கு வகித்​தது. ஒரு கட்​டத்​தில் லக்னோ அணி 16 ஓவர்​களில்...
சீனா​வின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத்​தர​வரிசை​யில் 25-வது இடத்​தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 20-வது இடத்​தில் உள்ள சீன தைபே​வின் ஷி யு ஜென்​னுடன் மோதி​னார். இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். கால் இறுதி சுற்​றில் போட்​டித்...
போட்​ஸ்​வானா நாட்​டில் பிசிஏ கலாஹாரி மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று கபோரோனில் உள்ள போட்​ஸ்​வானா கிரிக்கெட் சங்​கத்​தின் ஓவல் 2 மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் லெசோதோ - பிரேசில் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பிரேசில் 202 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக மோனிகே மச்​சாடோ 69, ரோபர்டா ஏவரி 48 ரன்​கள் விளாசினர். 203 ரன்​கள் இலக்குடன் பேட்...