இஷான் கிஷன் 270 ரன்கள் விளாசல் – கிழக்கு மண்டலம் 708 ரன்கள் குவித்து மிரட்டல்

0
12

துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்டியில் கிழக்கு மண்​டலம் – தென் மண்டலம் அணி​கள் விளையாடி வரு​கின்​றன. சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்​டலம் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 79 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 385 ரன்​கள் குவித்​தது.

கேப்​டன் இஷான் கிஷன் 111, குமார் குஷாக்ரா 63 ரன்​களு​டன் ஆட்ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டம் நடை​பெற்​றது. இஷான் கிஷனும், குமார் குஷாக்​ரா​வும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் சேர்த்​தனர். குமார் குஷாக்ரா 128 பந்​துகளில், 8 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் சதம் விளாசி​னார். முதல்தர கிரிக்​கெட் போட்​டிகளில் இது அவரது 6-வது சதமாக அமைந்​தது.

சதம் விளாசிய சிறிது நேரத்​திலேயே குமார் குஷாக்​ரா, திரிபுரண விஜய் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். குமார் குஷாக்ரா 132 பந்​துகளை எதிர்​கொண்டு 101 ரன்​கள் சேர்த்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு குமார் குஷாக்​ரா, இஷான் கிஷன் ஜோடி 290 பந்​துகளில் 230 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து அனுகுல் ராய் களமிறங்​கி​னார்.

அதிரடி​யாக விளை​யாடிய இஷான் கிஷன் 270 பந்​துகளில், 26 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் இரட்டை சதம் விளாசி​னார். முதல்தர கிரிக்​கெட் போட்​டிகளில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடிப்​பது இது 2-வது முறை​யாகும். அனுகுல் ராய் 45, முகமது ஷமி 28, முகமது கவுனைன் குரேஷி 40 ரன்​களில் நடையை கட்​டினர். மட்​டையை சுழற்​றிய இஷான் கிஷன் 334 பந்​துகளில், 7 சிக்ஸர்கள், 30 பவுண்​டரி​களு​டன் 270 ரன்​கள் விளாசிய நிலை​யில் திரிபுரண விஜய் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இஷான் கிஷன் 522 நிமிடங்​கள் களத்​தில் செல​விட்​டார்.

கடைசி விக்​கெட்​டாக முகேஷ் குமார் (0) நடையை கட்​டி​னார். முடி​வில் கிழக்கு மண்​டலம் அணி 163 ஓவர்​களில் 708 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தென் மண்​டலம் அணி சார்​பில் திரிபுரண விஜய் 4 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். ஸ்ரேயஸ் கோபால், ஷாமா மிலிந்த் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 3-வது நாளான இன்று தென் மண்​டலம் அணி தனது பேட்​டிங்கை தொடங்​கு​கிறது.

முச்​சதம் வாய்ப்பு நழு​வியது

துலீப் டிராபி வரலாற்​றில் முச்​சதம் அடித்த ராமன் லம்பா (1987-ம் ஆண்​டு), ககன் கோடா (2001-ம் ஆண்​டு) ஆகியோரின் சாதனை பட்​டியலில் இடம் பெறும் வாய்ப்பை இஷான் கிஷன் தவற​விட்​டார். தென் மண்​டலம் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இஷான் கிஷன் 270 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

சுழலுக்கு எதி​ராக ரன் வேட்டை

இடதுகை வேகப்​பந்து வீச்​சாளர் சி.​வி. மிலிந்த் வீசிய பந்து இஷான் கிஷனின் வயிற்​றுப் பகு​தி​யில் தாக்​கியது. இதனால் மருத்​துவ உதவிக்​காக ரிட்​டயர்டு முறை​யில் இஷான் கிஷன் வெளி​யேறி​னார். இதன் பின்​னர் அனுகுல் ராய் ஆட்​ட​மிழந்​ததும் மீண்​டும் களமிறங்கி மட்​டையை சுழற்​றி​னார் இஷான் கிஷன்.

முக்​கிய​மாக சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​டார். ஸ்ரேயஸ் கோபால் வீசிய 100 பந்​துகளில் 94 ரன்​களை​யும், திரிபுரண விஜய் வீசிய 88 பந்​துகளில் 70 ரன்​களை​யும் விளாசி அசத்​தி​னார் இஷான் கிஷன்.

‘தாக்கம் இல்லை’

தென் மண்டல அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான முகமது சிராஜ் 2 நாட்​களி​லும் தனது பந்​து​வீச்​சில் எந்த ஒரு தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​த​வில்​லை. 25 ஓவர்​களை வீசி​ய அவர்​, 3 மெய்​டன்​களு​டன்​ 140 ரன்​களை தா​ரை வார்​த்​தார்.

கவனம் ஈர்த்த இஷான்

சென்​னை​யில் நடை​பெற்று வரும் துலீப் டிராபி இறு​திப் போட்டியை தேர்​வுக்​குழு உறுப்​பினர்​கள் 3 பேர் நேரில் பார்வையிட்டு வரு​கின்​றனர். இந்த சூழ்​நிலை​யில் இஷான் கிஷனின் மட்டை வீச்சு கவனம் பெற்​றுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here