ஈரான் வரைபடத்தில் அதிபர் ட்ரம்பின் முகம்: புதிய ஏஐ புகைப்படங்கள் வெளியீடு

0
15

ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏஐ புகைப்​படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு வீடியோவை சில நாட்​களுக்கு முன்பு சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார். அதில் ஈரானின் கார்க் தீவு அழிக்​கப்​படு​வது போன்ற காட்​சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் கடந்த 6-ம் தேதி ஏவு​கணை​களை வீசி மிகப்​பெரிய தாக்​குதலை நடத்​தி​யது.

இந்​தச் சூழலில் அதிபர் ட்ரம்ப், ஏஐ தொழில்​நுட்​பத்​தில் உருவாக்கப்​பட்ட புதிய புகைப்​படங்​களை சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்​டார். அதில் ஒரு புகைப்​படத்​தில், ஈரான் வரைபடத்​தில் அதிபர் ட்ரம்​பின் முகம் பதி​விடப்​பட்டு உள்​ளது.

மற்றொரு ஏஐ புகைப்​படத்​தில் அமெரிக்க போர் விமானம், ஈரானின் கார்க் தீவு மீது குண்​டு​களை வீசி தகர்க்​கும் காட்சி இடம்​பெற்று உள்​ளது. அதோடு அவர் வெளி​யிட்ட பதி​வில், ‘பை, பைகார்க்’ என்று குறிப்​பிட்டு உள்​ளார்.

மேலும் அதிபர் ட்ரம்ப் வெளி​யிட்ட பதி​வில், ‘ஈரான் வீழ்​கிறது’ என்று தெரி​வித்​துள்​ளார். ஈரானின் ஹார்​முஸ் ஜலசந்​தியை அமெரிக்​கா​வின் ஒருங்​கிணைந்த பகுதி என்று குறிப்​பிட்டு மற்றொரு புகைப்​படத்​தை​யும் ட்ரம்ப் வெளி​யிட்டு இருக்​கிறார். ஈரான் கரன்சி அழிக்​கப்​பட்டு விட்​டது என்​றும், ஈரானின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி முழு​மை​யாக முடங்​கி​யிருக்​கிறது என்​றும் அதிபர் ட்ரம்ப் புள்​ளி​விவரங்​களை வெளி​யிட்டு உள்​ளார்.

அமெரிக்​கா, ஈரான் போருக்கு முன்​பாக ஹார்​முஸ் ஜலந்தி வழியாக நாள்​தோறும் 2 கோடி பேரல் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து நடை​பெற்​றது.

தற்​போது ஈரானின் தலை​யீடு இல்​லாமல் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக தின​மும் 1.80 கோடி பேரல் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து நடை​பெறுகிறது என்று அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் தெரி​வித்து உள்​ளார்.

ஈரான் பகிரங்க எச்​சரிக்கை

ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப் நேற்று கூறும்​போது, “அடுத்த கட்​ட​மாக வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க எண்​ணெய் வயல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும்” என்​றார்.

ஈரான் வெளி​யுறவுத் துறை நேற்று வெளி​யிட்ட பதி​வில், “பெர்​சிய வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க ராணுவத்​தோடு, தென்​கொரிய ராணுவம் இணைந்து செயல்​பட்​டால் மிகக் கடுமை​யான விளைவுகளை சந்​திக்​க நேரிடும்​” என்​று பகிரங்​க​மாக எச்சரிக்கை விடுக்கப்​பட்​டு உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here