சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

0
22

 சவுதி அரேபியாவின் தம்​மாமில் உள்ள கிங்ஃபஹத் சர்​வ​தேச விமான நிலை​யம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்​கள் நடத்​திய ட்​ரோன் தாக்​குதலில் ஓர் இந்​தி​யர் உட்​பட இரு​வர் உயி​ரிழந்​த​தாகவும், இரு​வர் காயமடைந்​த​தாகவும் இந்​திய வெளி​யுறவு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இது​குறித்த கூடுதல் விவரங்​களைச் சேகரித்து, பாதிக்​கப்​பட்ட குடும்பங்களைத் தொடர்​பு​கொண்டு வரு​வ​தாகவும் கூறியுள்​ளது.

“உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினருக்​கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்​கலை​யும் பிரார்த்தனைகளையும் தெரி​வித்​துக் கொள்​கிறோம்; காயமடைந்தவர்​கள் விரைவில் குணமடைய வேண்​டு​கிறோம். ரியாத்​தில் உள்ள இந்​தி​யத் தூதரகம் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தொடர்​பில் இருக்​கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை​யான அனைத்து உதவிகளையும் வழங்​கும்” என்று வெளி​யுறவு அமைச்சகம் தெரிவித்​துள்​ளது.

இதனிடையே, இந்​தத் தாக்​குதலில் காயமடைந்​தவர்​கள் சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​ட​தாகவும், தாக்​குதலால் விமான நிலை​யம் சேதம் ஏற்​பட்​ட​தாகவும், அதன் அளவைக் கண்​டறியும் பணி நடை​பெற்று வரு​வ​தாகவும் சவுதி சிவில் விமானப் போக்​கு​வரத்து ஆணை​யம் கூறியுள்​ளது.

இதற்​கிடை​யில், பாது​காப்பு அச்​சுறுத்​தல்​களைக் கருத்​தில் கொண்டு, சவுதி அரேபியாவில் அவசரப் பணி​யில் இல்​லாத அமெரிக்​காவைச் சேர்ந்த ஊழியர்​களும் அவர்​களின் குடும்பத்தினரும் வெளியேற வேண்​டும் என அந்​நாட்டு வெளியுறவுத் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள், சவுதி அரேபியாவுக்கு எதிரான தாக்​குதல்​களை மேலும் தீவிரப்​படுத்தியுள்​ள​தாக அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் டாமி பிகோட் தெரி​வித்​துள்​ளார். இதில் சிவில் விமான நிலை​யங்​கள் மற்​றும் பிற முக்​கிய உள்​கட்​டமைப்​பு​கள் மீதான தாக்​குதல்​களும் அடங்​கும் என்​றும், இதன் காரண​மாகப் பொது​மக்​கள் உயிரிழப்பும் பயண இடையூறுகளும் ஏற்​பட்​டுள்​ளன என்​றும் அவர் கூறினார்.

தம்​மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்​வ​தேச விமான நிலை​யம் மீது நடந்த தாக்​குதல், சவுதி​யில் உள்ள ஆரம்கோ நிறு​வனத்​தின் ஷைபா எண்​ணெய் வயல் மீது நடந்த ட்​ரோன் தாக்​குதல், சவுதி அரேபியாவின் பொது​மக்​கள் மற்​றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்​குதல்​களை இந்​தியா கண்டித்துள்​ளது.

பொது​மக்​கள் மற்​றும் முக்​கிய உள்​கட்​டமைப்​பு​கள் மீதான தாக்குதல்​களை உடனடி​யாக நிறுத்த வேண்​டும் என மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் கேட்​டுக்​கொண்​டுள்​ளது. சவுதி அரேபியாவின் மக்​களு​டனும் அரசுடனும் அதன் இறை​யாண்​மையைப் பாது​காப்​ப​தில் இந்​தியா ஒற்​றுமையுடன் நிற்​ப​தாகவும், அங்கு விரைவில் அமைதி திரும்​பும் என நம்​புவ​தாகவும் அது கூறியுள்​ளது.

கச்சா எண்​ணெய் விலை உயர்வு

சவுதி அரேபியாவில் ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்​பினர் மீண்​டும் தாக்​குதல்​களை நடத்​தி​யதைத் தொடர்ந்து, நேற்று பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை கடந்த மே மாதத்​துக்​குப் பிறகான உச்​சபட்ச நிலையை எட்​டியுள்​ளது. நேற்று காலை நில​வரப்​படி, பிரெண்ட் கச்சா எண்​ணெய் பேரல் ஒன்​றுக்கு 3.35 டாலர் (3.08%) உயர்ந்து 112.17 டாலராக விற்​பனையானது.

இது கடந்த மே 18-ம் தேதிக்​குப் பிறகு பதிவான அதி​கபட்ச விலையாகும். வர்த்​தகத்​தின்​போது பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை ஒரு கட்​டத்​தில் பேரலுக்கு 112.55 டாலர் வரை தொட்​டது. அமெரிக்கா​வின் ‘வெஸ்ட் டெக்​சாஸ் இன்​டர்​மீடியேட்’ (டபிள்​யூடிஐ) கச்சா எண்​ணெய் விலை​யும் உயர்ந்து, பேரலுக்கு 2.68 டாலர் (2.76%) அதிகரித்து 99.83 டாலராக உயர்ந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here