உலக பாரா வில்வித்தை போட்டி: 2 தங்கம், ஒரு வெள்ளி வென்றது இந்தியா

0
16

உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் தோமன் குமார், ஷியாம் சுந்​தர் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 152-139 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இராக் அணியை வீழ்த்தி தங்கப் பதக்​கம் வென்​றது.

ஆடவருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் ஹர்விந்​தர் சிங், விஜய் சந்தி ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 6-2 என்ற கணக்​கில் சுலோவேக்​கியா அணியை தோற்கடித்து தங்​கப் பதக்​கம் வென்​றது. மகளிருக்​கான ரீகர்வ் அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் பாவ்​னா, பூஜா ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 0-6 என்ற கணக்​கில் சீனா அணி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றது. மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் ஷீத்​தல் தேவி, பாயல் நாக் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி, சீனா அணி​யிடம்​ தோல்​வி அடைந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here