மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகைக்கு 14 மாதங்களாக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவித்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும்மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி தலைமை வகித்து கூறியதாவது: தமிழக அரசின்...
உயர்கல்வித் துறை சார்பில், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கலில் உள்ள கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதியவகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சார்பில் நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்காலிக கட்டிடங்களில் இயங்கிவந்த புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 12.40 கோடியிலும், திருமயம் அரசு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 10 பேர் மீண்டும் பூந்தமல்லி சிறையில் அடைப்பு
admin - 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கியரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மேலும் 10 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள...
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசையும், நீர் திறக்க நடவடிக்கை...
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டதை அடுத்து அவர் இன்று (ஜூலை 17ம் தேதி) காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில்,...
எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 986 மருந்தாளுநர்களுக்கு பணி கோரி சுப்ரியா சாஹுவிடம் மனு
admin - 0
தமிழகத்தில் 986 மருந்தாளுநர் பணியிடத்துக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) 2022 ஆகஸ்டில் வெளியிட்டது. இதற்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
2023 ஏப்ரலில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நவம்பரில் முடிந்துவிட்டது. ஆனால், 10 மாதங்கள் ஆகியும் தேர்வு செய்யப்பட்ட 986 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை.
எனவே, அவர்களுக்கு விரைவாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்,...
காலை உணவு திட்டம் குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நேற்று சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், ‘காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும்.
எனவே, பள்ளி மாணவர்களுக்கு வெறும், சாப்பாடு, இட்லி, தோசை என கொடுக்காமல், சிறுதானியங்கள், முட்டை...
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க அறிக்கையின் விவரம் வருமாறு: கடந்த 2011-12...
கோவை இளைஞர் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள்: எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் கடந்த 2016 ஏப்ரல் 3-ம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ரத்தினபுரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், கார்த்திக், மகேந்திரன், சுரேஷ், கவாஸ்கான், ஜெய்சிங்,...
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு: ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
admin - 0
கர்நாடக அணைகளில் இருந்துதிறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 14-ம் தேதி காலை அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக பதிவானது. ஆனால், நேற்று காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 4,500 கனஅடியாக குறைந்தது.
இதற்கிடையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து...










