பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்ஐ) அமைப்பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழகம் மட்டும் 9 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
குறிப்பாக, இந்தியன் ஆயில்...
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது 2022 டிச. 26-ம்.தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. 220-க்கும் மேற்பட்டோரிடம்...
நாட்டின் பல்வேறு மாநில கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறும் சரஸ் மேளா, விற்பனை கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இக்கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை, பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ‘சரஸ்’ எனும் விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி,...
அரசியல் கட்சித் தலைவர் மற்றும் மடாதிபதிகள் குறித்து பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கடந்த டிச.15-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பெண் வழக்கறிஞர் குறி்த்து தரக்குறைவாக விமர்சித்ததாக மற்றொரு வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாரும்...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வீடுகளில் நட்சத்திர வடிவிலான விளக்குகளை ஒளிரவிட்டு, இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்ததை குறிக்கும் வகையிலான குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து பண்டிகையை கிறிஸ்துவர்கள் இன்புற வரவேற்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நேற்று...
வார இறுதி நாட்களையொட்டி 586 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் டிச.27, 28 தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு 485 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி,...
மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு: அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்
admin - 0
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை முதல்வர் ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு சட்டம்...
தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சம் பெண் குழந்தைகளை சேர்க்கும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்
admin - 0
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா சென்னை அடையாறில் நேற்று கொண்டாடப்பட்டது. பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...
இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற உட்கட்சி பஞ்சாயத்து மீண்டும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்குப் போயிருக்கிறது. இதனால், அதிமுக கூட்டணிக்காக பாஜக தலைமை பகீரத பிரயத்தனம் செய்துவரும் நிலையில் சின்னத்தை வைத்து சித்து விளையாட்டுக் காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் அதிமுக-வினர் மத்தியில் அலையடிக்கிறது.
ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த அதிமுக-வுக்குள் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிகாரப் போட்டியால் ஏகப்பட்ட குழப்பங்கள். அதனால், மக்கள் மன்றத்தில் அந்தக் கட்சி தொடர் தோல்விகளைச்...
மீண்டும் சம்பவம் நிகழாதவாறு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உறுதி
admin - 0
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் நேற்று விடுத்த அறிக்கை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார்
. அதில், “எனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் இருவரையும் அச்சுறுத்தினார். பின்னர் அதே நபர் எனது நண்பரை தாக்கிவிட்டு என்னிடம் பாலியல்...










