குறுகிய, நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் தபால்கள், பார்சல்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வாகனம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சலக வட்டம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவை தற்போது 120 வாகனங்களுடன் செயல்படுகிறது. இதனால், பகுதி முழுவதும் தபால்கள், பார்சல்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், குறுகிய மற்றும் நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் தபால்கள், பார்சல்களை திறமையாக கொண்டு செல்ல ஏதுவாக புதிய வாகனம்...
ஆயிரம் ஆண்டுகள் பழமையான 39 கோயில்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலுக்கு ரூ.72.80 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம் பிடித்து நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 46 மாதங்களில் ரூ.74.51 கோடி மதிப்பீட்டில் 114 புதிய மரத்தேர்கள் செய்திடவும், ரூ.16.20 கோடி மதிப்பீட்டில் 64...
குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்
admin - 0
வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குருப்-1 தேர்வு, குருப்-4 தேர்வு, குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வு உள்பட மொத்தம் 7 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல்...
தமிழகத்தில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை...
ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் சென்னை ஐசிஎஃப் ஆலையில் மேம்படுத்தப்படும் – ரயில்வே துறை அமைச்சர் தகவல்
admin - 0
ஹைப்பர் லூப் திட்டத்துக்கான மின்னணு தொழில்நுட்பம் அனைத்தும் சென்னை ஐ.சி.எஃப்-ல் மேம்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
விமானத்தைவிட வேகமாக, நிலத்தில் செல்லும் அதிவேக போக்குவரத்து அமைப்பாக உருவெடுக்க உள்ள ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்து, பல்வேறு நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ரயில்வே துறை நிதியுதவியுடன் சென்னை ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தையூரில் உள்ள டிஸ்கவரி சைட்டிலைட் வளாகத்தில் அமைந்துள்ள...
உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை: மும்பையை சேர்ந்த இருவர் சென்னையில் கைது
admin - 0
உடல்வலி நிவாரண மாத்திரைகைளை போதைப் பொருளாக விற்பனை செய்து வந்த மும்பையைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளர்.
போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை போலீஸார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். அப்படையினர், காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பூக்கடை போலீஸார் நேற்று முன்தினம் காலை சென்னை, மெமோரியல் ஹால் ரோட்டில் உள்ள...
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஷிஹான் ஹுசைனிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு
admin - 0
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான இவர், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார்....
ராமாபுரத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வீட்டை விட்டுவெளியேறினர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
சென்னை ராமாபுரம் கோத்தாரி நகரில் செயல்படும் பழைய பொருட்கள் விற்பனை கடையில் நேற்று மாலை திடீரென தீ பிடித்தது. பின்னர், அருகே இருந்த கார் மெக்கானிக் செட், பர்னிச்சர் குடோன் என அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியது. தகவல் அறிந்து...
இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர் மற்றும் ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்னிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,...
சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.முத்துலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் குறித்து...










