Google search engine
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை, வானதி உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்களை போலீஸார் முன்கூட்டியே கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு வருவதை தடுக்கும் வகையில் பாஜக தலைவர்களை வீட்டிலேயே போலீஸார் கைது...
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை ஒட்டியே...
சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் பேரவை தலைவர் அப்பாவு மீதான அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 16 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கடிதம் வழங்கி இருந்தனர். இந்நிலையில்,...
புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் (ஜிடி) விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த ரயிலை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து வேலைவாய்ப்புக்காகவும், மேற்படிப்புக்காகவும், நுழைவுத்தேர்வு, நேர்காணல், மத்திய அரசு சம்பந்தமான அலுவல்கள் போன்றவைகளுக்காக தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் புதுடெல்லிக்குப் பயணிக்கின்றனர். மேலும், தமிழகத்தில் இருந்து வட இந்தியாவில் பல்வேறு இடங்களில்...
டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டுவோம் என்றும் இனி தமிழகத்தில் காவல் துறையை தூங்க விடமாட்டோம். டாஸ்மாக் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின்தான் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை கைது செய்த போலீஸார், 10-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் அடைத்தனர். இந்நிலையில், மாலை 6 மணி கடந்தும் விடுவிக்காததால், போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலிகிராமத்தில்...
சென்னை அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே ரூ.1 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் ரூ. 3 லட்​சத்தை இடைக்​கால நிவாரண​மாக 4 வார காலங்​களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை அண்​ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு​வர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​டார். இதுதொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை, அண்​ணாநகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கியது தொடர்​பாக, தாமாக முன்​வந்து விசா​ரித்த...
ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ஊக்கத்தொகையை அரசு உடனடியாக வழங்கி, அவர்களின் நலன் காக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். சுமார் 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கின்றனர். விவசாயிகளிடம் இருந்து தினசரி 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது....
தமிழை வளர்க்க பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ ‘ரூ’ போடத் தேவையில்லை. மாறாக அன்னைத் தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழை எட்டாம் வகுப்பு வரையிலாவது பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 1999-ல் சென்னையில்...
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் வரும் 24-ம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.நாராயணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுத் துறையில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியரின் முதுமை கால வாழ்வாதாரம் கருதி, சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு ஓய்வூதியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், இன்றைய சூழலில்...
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா, சென்னை, வடபழனியில் உள்ள எஸ் ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மகளிர் திருவிழா நிகழ்ச்சியில் துணை செய்தி ஆசிரியரும், ‘பெண் இன்று’ பொறுப்பாளருமான பிருந்தா சீனிவாசன் வரவேற்றார். விழாவை, மகப்பேறு மருத்துவரும் ‘மித்ராஸ்’ ஃபவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் அமுதா ஹரி, சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மருத்துவர் அமுதா ஹரி...