Google search engine
டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்றும், சத்தீஸ்கரை விட தமிழகத்தில் மிகப்பெரிய மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் நிறுவனம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், பாட்டில் உற்பத்தி நிறுவனங்கள் என மூன்று நிறுவனங்கள் உள்ளன. இதில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 40 சதவீதம் மதுபானம் முறையான...
தமிழக அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் பட்ஜெட் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.: தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்வை. தமிழ் மொழி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பல்வேறு சோதனைகள், அடக்குமுறைகளைத் தாண்டி,...
நிறைவேற்றவே முடியாத அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட்டில், மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக் கடன் ரத்து, காஸ் சிலிண்டர் மானியம், 100 நாள் வேலைத்திட்ட ஊதிய உயர்வு போன்ற திமுகவின் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குவது மட்டும்தான்...
அரசியல் கட்சிகளின் அன்றாட பேரணி, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போலீஸாரின் வேலை அல்ல என்றும், இனி வரும் நாட்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே...
தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு தொழில் துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். சென்னை தொழில், வர்த்தக சபை தலைவர் ராம்குமார் சங்கர்: தமிழக அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் சர்வதேச நகரம், ரூ.3,500 கோடியில் குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டம், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் முதலீடுகளை...
தமிழக பட்ஜெட் தொடர்பாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.ஹரிசங்கர்: அரசு ஊழியர்கள் தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. 2026-2027 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை தற்போது வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்-ஆசிரியர் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. அரசுத் துறைகளில்...
டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தினர். அண்மைக்காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 19 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, 145 தமிழக...
தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். திருச்சியி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை மாநகராட்சியில் கழிப்பறைத் திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற ஊழல்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால்...
ரூபாய் குறியீடு ஒரு பிரச்சினையே இல்லை. அவரவர் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மாநில அரசு ஏற்பதாக பட்ஜெட்டில் அறிவித்ததை வரவேற்கிறேன். இனிமேலாவது மத்திய அரசு வெட்கப்பட்டு, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன். ரூபாய் குறியீடு அந்தந்த மொழி அடிப்படையில் குறிப்பிடப்படும். ஆவணங்களில் ரூபாயை Rs...
சென்னையில் மார்ச் 19-ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ.க்கு ரூ.25, அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கு ரூ.12 என ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை. இந்நிலையில், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், விலைவாசி உயர்வுக்கேற்ப மீட்டர் கட்டணத்தை...