Google search engine
எந்த ஒரு மொழியையும் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவந்து 57 ஆண்டுகளாகியும், எந்த மாநிலத்திலும் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழகம், தேசிய சராசரியைவிட சிறப்பான நிலையை அடைந்துள்ளது. முற்றிலும் தோல்வி அடைந்த மும்மொழிக் கொள்கை...
தமிழகத்தில் மதுபான ஊழல் மூலம் திமுகவுக்கு ரூ.1,000 கோடி கருப்பு பணம் கைமாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம். மே மாதத்துக்குள் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்றுவிடுவோம். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் மும்மொழி பயிலும் மாணவர்கள் 15.20 லட்சம் பேர் இருப்பதாகக் கூறியுள்ளார். இவர்கள் சிபிஎஸ்இ...
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் எந்த தாமமும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் கடந்த 10-ம் தேதி ரயில்வே திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அதன் விவரம்: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2,197 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த ஏற்கெனவே...
கட்டணமில்லா கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க போக்குவரத்துத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் இருபாலருக்கும், கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற்று வழங்க இருக்கின்றன. அதன்படி கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, குடும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி,...
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டுத் தொகையை 3 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரி்ல் மலைக்கிராம மக்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்தது. அதன்படி அதிரடிப்படை போலீஸாரால்...
தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரும் மார்ச் 18-ம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தேசித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 3.11 கோடி ஆண் வாக்காளர்கள், 3.24 கோடி பெண் வாக்காளர்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 68 ஆயிரம்...
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மார்ச் 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை...
கோவை பாரதியார் பல்கலை.யில் 2016-ல் 500 கணினிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவை ரூ.84.57 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரி இவற்றைக் கொள்முதல் செய்ததால் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பல்கலை. தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த சிண்டிகேட் கூட்டத்ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கணபதி,...
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டுகளில்...
ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பணிகள் முடிவுற்ற அரசுத் துறை கட்​டிடங்​களை​யும் திறந்து வைத்​தார். செங்​கல்​பட்டு மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் அரு​கில் நேற்று நடை​பெற்ற அரசு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​றார். அதில், ரூ.280.38 கோடி மதிப்​பில் 47 முடிவுற்ற கட்​டிடங்​கள் மற்​றும் நலத்​திட்​ட பணி​களை திறந்து வைத்​தார். தொடர்ந்​து, நகராட்சி நிர்​வாகத் துறை...