நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியுடன் கடந்த 3-ம் தேதி கோடை விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை...
காலமானவர் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயர் சேர்க்க பட்டா மாற்றத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
admin - 0
பட்டாவில் மறைந்த நில உரிமையாளர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுகள் மற்றும் தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையங்கள் அல்லது ‘சிட்டிசன் போர்ட்டல்’ வாயிலாக ஆன்லைனில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளம்...
நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், டெல்டா மாவட்டங்களில் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அனுமதி...
கடலுக்குள் காற்றாலை மின்னுற்பத்தி செய்வது தொடர்பாக, டென்மார்க் நாட்டு எரிசக்தி முகமை அதிகாரிகளுடன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இத்திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. கடலில் அமைக்கப்படவுள்ள காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும்...
மற்ற மாநிலங்களைவிட கல்வியில் தமிழகம் சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
admin - 0
கல்வியில் தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்து, கல்லூரி கனவு-2025 எனும் வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து தமிழக...
பாதுகாப்பு கேட்டு நடிகை கவுதமி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நடிகை கவுதமி, தற்போது, அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தனக்கு சொந்தமான ரூ.9 கோடி மதிப்புள்ள சொத்தை தன்னிடம் பணியாற்றிய அழகப்பன் மோசடி செய்து அபகரித்ததாகவும், சட்ட விரோதமாக அனுமதி பெற்று அங்கு கட்டிடம் கட்டி வருவதாகவும் காவல் துறையில் சமீபத்தில்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அயனாவரத்திலிருந்து சுரங்கப்பாதை தோண்டி பெரம்பூரை வந்தடைந்த ‘கல்வராயன்’ இயந்திரம்
admin - 0
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்' இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க...
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு
admin - 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்சத்துக்கும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றசம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த...
அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிருக்கு உதவி மையம்: மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்
admin - 0
காவல் துறையில் பெண்கள் என்ற தலைப்பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நேற்று தொடங்கியது மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார். இன்று நடக்கும் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பெண் காவலர்களை கவுரவிக்கும் வகையில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது செங்கல்பட்டு...
தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அன்புடன் “இசைஞானி” என அழைக்கப்பட்டவர் இளையராஜா. அந்த பெயரே இன்றைக்கு தமிழரின் இசை அடையாளமாக உலகெங்கும் ஒலிக்கிறது.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதும்,...










