ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் விஜயவாடாவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆந்திர மாநிலத்தின் துணைமுதல்வராக நேற்று பொறுப்பேற்றார். நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தற்போதைய ஆந்திர மாநில அரசியலின் ‘கேம் சேஞ்சர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று சந்தித்த பின்னர், சிறைக்கு வெளியே வந்து, “தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சியும் இணைந்து வரும் தேர்தலில்...
பிஹாரில் நீட் வினாத் தாள் கசிந்தது தொடர்பாக அம்மாநில பொருளாதார குற்றப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பிஹார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா நேற்று கூறிய தாவது: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பிஹார் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்துகைது செய்யப்பட்டவர்களுக்கும் பிரீத்தம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல பிரீத்தமுக்கும் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள(ஆர்ஜேடி) மூத்த தலைவருமான தேஜஸ்வி...
உ.பி.யில் சட்டப்பேரவையின் 9 உறுப்பினர்கள் மக்களவைக்கு போட்டியிட்டு, எம்.பி.யாகி விட்டனர். இதனால், அந்த 9 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இத்துடன், சிஷாமா தொகுதி சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி, ஒரு வழக்கில் ஏழு வருட தண்டனை பெற்றுள்ளார். இதனால் சிஷாமாவுக்கும் சேர்த்து 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் 4 முறை முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) போல் தலித் ஆதரவு பெற்றவராக...
தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாகவும் இதனால், தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவி ஆயுஷி படேல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கான ஆவணங்களை இணைத்த அவர், தன்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும் என்றும் தன் மனுவில் கோரி இருந்தார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அம்மாணவியின் விடைத் தாள் தொடர்பான...
காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி பேருந்தில் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மறுநாள் தோடா மாவட்டத்தின் பாதர்வா என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் தோடா...
ஜெகன் ஆட்சியில் விசாகப்பட்டினத்தின் ரிஷிகொண்டா மலைப் பகுதியில், அரசுப் பணம் ரூ. 500 கோடி செலவில் 7 சொகுசு பங்களாக்களை ரகசியமாக கட்டியுள்ளனர். இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகரமாக்க முயற்சித்தார். இதனால், அப்போதைய அமைச்சர் ரோஜாவின் தலைமையில், சுற்றுலா வளர்ச்சி கழகம்சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா எனும் இடத்தில் இருந்த மிக அழகான மலையின்...
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணா ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் கொச்சியில் உள்ள ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்று கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியது. இதற்கு லஞ்சமாக ஒவ்வொரு மாதமும் அந்த நிறுவனம் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து நீதிமன்ற...
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்ற பின், ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் வரும் 21-ம் தேதிமுதல் முறையாக தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரும் 21 மற்றும் 22 ஆகியஇரு நாட்களும் ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்க உள்ளனர். மேலும், சபாநாயகராக அய்யண்ண பாத்ருடு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்....
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக 8 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர் ஸ்வாதி மாலிவால்.இவர் கடந்த ஜனவரி மாதம் ஆம்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். இவர் ராகுல், சரத் பவார்,உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் உட்பட இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: டெல்லி மகளிர் ஆணைய தலைவராக நான் பதவி வகித்த காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து மதுரஸ் பால் என்ற அந்தப் பயணி வெளியிட்ட எக்ஸ்பதிவில், “ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்றவெட்டக்கூடிய உலோகத் துண்டுகிடந்தது. வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திபழ சாட்டில்...