வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவருமான ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்...
பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிலைத்து நீடிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், “நாட்டில் வெறுப்பைப் பரப்பலாம், அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் அதை தான் சுட்டிக்காட்டுகிறது.
பிரதமர் மோடிக்கு கடந்த 2014 மற்றும்...
காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் நேரடியாக கலந்துகொண்டார்.
ஒழுங்காற்று குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், கர்நாடகா, கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு...
கர்நாடகாவில் தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாயார் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சதாசிவ நகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், புகார்தாரர் கடந்த மே 25-ம் தேதி உயிரிழந்தார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் (சிஐடி) ஜூன் 12-ம்...
குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்கள் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று காலை கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 31 பேரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர்...
“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” – பிரதமர் மோடி பேச்சு @ ஜி7 மாநாடு
admin - 0
“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியனவற்றை சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.
50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில்,...
காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மோடி ஆய்வு: முழு திறனையும் பயன்படுத்த பாதுகாப்பு படைக்கு உத்தரவு
admin - 0
ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படைகளின் முழுதிறனையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ரெசி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு கதுவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி பாதுகாப்பு படையினரின்...
மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையிலான மோதல் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களை சமமாக மதித்துஅவர்களது நலனை உறுதி செய்பவரே உண்மையான ஆட்சியாளர்.சமயசார்பின்மை என்பதே இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகும். கண்மணியைக் காப்பது போன்று சமயசார்பின்மையை புதிய மத்திய அரசு பாதுகாக்கும் என்று இந்த...
முஸ்லிம்களிடம் தனி நாடு கோரிக்கையை தூண்டிவிடும் நடவடிக்கைகளில் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு முகமைகளுக்கு உளவுத் துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான உளவுத்தகவல்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்து வருகின்றன.
நீதிக்கான சீக்கிய பிரிவினைவாத அமைப்பு (எஸ்எஃப்ஜே) காலிஸ்தான் தனிநாடு கோரி ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில்...
டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்தீவிரவாதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்22-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, கடந்த 2001-ம் ஆண்டில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரீபை கைது செய்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு...









