Google search engine
தேர்தலுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், அமைச்சர்களும் பதவியேற்கும்போது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அரசியல் சாசனத்தை உயர்த்திக் காட்டினர். இதுகுறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் கூறிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனம் மீது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின்...
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் என்னசெய்வதென்று தெரியாமல், நடக்கும் சம்பவங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இளநிலை நீட் தேர்வு, யுஜிசி-நெட் தேர்வு முறைகேடு தொடர்பாகசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வுஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பாஜக ஆட்சியில் ஒட்டு மொத்த கல்வி முறையும், ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியும், மாணவர்களின் எதிர்காலமும், பேராசை மற்றும் முகஸ்துதி...
நாடாளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 9-ம் தேதி, நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையின் தற்காலிக தலைவராக பாஜக...
ஜெகன் ஆட்சியின் போது, தனது சொந்த கட்சி அலுவலகத்துக்காக ஆந்திர மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 42 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஒவ்வொன்றும் அரண்மனை போல்கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மாதம் ரூ.1,000 மட்டுமே வாடகைநிர்ணயிக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்கு குத்தகையும் போடப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகிஉள்ளது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த ஜெகன் ஆட்சியில் செய்த பல முறைகேடுகள் தினமும் வெளியே வந்த...
மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவை இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். 8 முறை எம்.பி.யாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், 7 முறை எம்பியாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இவ்விழாவை புறக்கணித்தனர். நாடாளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜக...
பிரபல க‌ன்னட நடிகர் தர்ஷன் (47) தனது தோழி பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை (33) அடித்துக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில்பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை போலீஸார் 17 பேரையும் காவலில் எடுத்து ஒருவாரத்துக்கு மேலாக தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், தர்ஷன் தனது தோழி பவித்ரா...
தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள்,காலனிய காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்று கூறி, மத்திய அரசு கடந்த ஆண்டு 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன்படி, இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா...
ஆந்திர மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், 175 பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மொத்தம் 164 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், முதன் முறையாக 2 நாள் நடைபெறும் பேரவைகூட்டம் நேற்று கூடியது. இதில் தற்காலிக சபாநாயகராக கோரண்ட்ல புச்சைய்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்....
மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க் கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த இருமாநிலங்களிலும் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அக்கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 18, ஹரியாணாவின் 10 தொகுதிகளில் 5 தொகுதிகள் மட்டுமே அக்கூட்டணிக்கு கிடைத்தன. இந்த இரண்டு மாநிலங்களிலும்முறையே 30...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு வங்கதேச அணியுடன் மோதுகிறது. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த்...