புதுடெல்லி: சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளஅமெரிக்காவிடம் இருந்து ரூ.32,000 கோடி மதிப்பில் 31 ப்ரீடேட்டர் டிரோன்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க தயாரிப்பான எம்க்யூ-9பி ப்ரீடேட்டர் டிரான்களை தற்போது அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் நோட்டோ நாடுகள் சில பயன்படுத்துகின்றன. செயற்கைகோள் கட்டுப்பாட்டில் நீண்டநேரம் பறக்கும் இந்த டிரோன்கள் ஆப்கானிஸ்தான் உட்பட சில நாடுகளில் மிகதுல்லிய தாக்குதல்களை நடத்தியுள்ளன.ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ‘ஹன்ட்டர் -கில்லர்’ டிரோன்கள் ‘ஹெல்ஃபயர்’...
புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சஷாங்க் ஜே. ஸ்ரீதரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் ஆஜரானார். அப்போது அவர் வாதிடும்போது, “தேர்தல்பிரச்சாரத்தின்போது பல்வேறு இலவசப் பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிக்கின்றன. இந்த இலவசப் பொருட்களை...
லக்னோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது பெண் குழந்தையை ரயில்வே போலீஸார், உ.பி. போலீஸார் சுமார் 16 கிலோமீட்டர் தேடி மீட்டனர். உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் தடத்தில் அண்மையில் தந்தையுடன் ரயிலில் பயணம் செய்த 8 வயது பெண் குழந்தை எமர்ஜென்சி ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துவிட்டது. இதையடுத்து, உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு அந்த குழந்தையின் தந்தை தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு அங்கு...
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், தரிசனம் மற்றும்பிரசாத டிக்கெட்களை இணையவழியில் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம், முன்பதிவு செய்யாதவர்கள் சபரிமலைக்கு சென்ற பிறகு தேவசம்வாரியம் சார்பில் குறிப்பிட்ட இடங்களில் செயல்படும் மையங்களில் தரிசன டிக்கெட் (ஸ்பாட் புக்கிங்) பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், இந்த ஆண்டுநேரில் தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும்...
புதுடெல்லி: பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு 45 சதவீதம்வரை இருக்கக்கூடிய மாணவர் ஒருவர் தனக்கு மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடம் மறுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: உடல் ரீதியான குறைபாடு 44 முதல் 45 சதவீதம்வரை இருக்கும் ஒரே காரணத்துக்காக மாணவர் ஒருவருக்கு எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்படுவதா? இதை...
அகமதாபாத்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த 17 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து டிஜிட்டல்அரெஸ்ட் மோசடி மேற்கொள்ளப் படுகிறது. மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களை விசாரணை அதிகாரிகள் என கூறி சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வீடியோ கால் செய்து, அவர்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவிப்பார்கள். பண மோசடி,...
புதுடெல்லி: நாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக நிலங்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சொத்துகளை கண்காணிக்க, கடந்த 1954-ல் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப் பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த 1995-ம் ஆண்டுவக்பு சட்டம் விரிவுப்படுத்தப் பட்டது. இந்நிலையில், வக்பு வாரிய நிர்வாக நடவடிக்கைகளை மேம் படுத்தவும், வக்பு வாரியம் தொடர் பான பிரச்சினைகளுக்குத் தீர்வு...
அமராவதி: கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லூரில் 146 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், நெல்லூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால்...
புதுடெல்லி: பிஹாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நிதிஷ், லாலு கட்சிகளுக்கு புதிய நெருக்கடி உருவாகி உள்ளது. பிஹார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள ராம்கர், தராரி, பேலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக இரண்டு கூட்டணிகள் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான...
ஸ்ரீநகர்: காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்கிறார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டும் கூட காங்கிரஸ் அதனைப் புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்றைய பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இன்றைய...