தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்: இஸ்ரோ தலைவர் கருத்து
admin - 0
சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங்நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா வழங்கியது.
இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். இவர்சர்வதேச விண்வெளி மையத்துக்கு பல முறை சென்று திரும்பிய அனுபவம் மிக்கவர். போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் பரிசோதனை முயற்சியாக, கடந்த மாதம் 5-ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட்...
ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தஇருவர் தரைப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உபேந்திர திவேதியும், தினேஷ் திரிபாதியும் 1970-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ரிவா சைனிக் பள்ளியில் 5-வது வகுப்பு முதல் ஒன்றாக...
புதிய குற்றவியல் சட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023...
கேரளாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அந்தமாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல் ஆகியவை அதிகமாக பரவி வருகின்றன.
இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணாஜார்ஜ் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கேரள சுகாதாரத் துறை...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இந்த முறை கூட்டணியின் பலத்தில் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கட்சியின்பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைகளும்...
21-60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் முதல் அமல்
admin - 0
21 முதல் 60 வயதுகுட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சர் பொறுப்பை வகிப்பவருமான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல்செய்தார். அப்போது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு இலவச திட்டங்களை அவர் அறிவித்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை...
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பதவியேற்ற பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அப்போது, “கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், விஐபி பிரேக்தரிசன டிக்கெட்டுகள், ஒப்பந்தபணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் வந்தன.
இதன் பேரில் திருப்பதி மற்றும் திருமலையில்...
‘ஜெய் சம்பவிதான்’ என கோஷமிட்டது பற்றி சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் ஹூடாவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் கண்டனம் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி.க்களில் சசிதரூர் எம்.பி.யாக பதவியேற்றார். உறுதிமொழியை வாசித்து முடித்ததும் அவர் ஜெய் ஹிந்த், ஜெய்சம்விதான் (அரசியல் சாசனம் வாழ்க) என கோஷமிட்டார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிஎம்.பி.க்களில் சிலர் அவையில் ‘ஜெய் சம்விதான்’ என கோஷமிட்டனர்....
அரசு எந்த முடிவு எடுத்தாலும், 3 அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். நோக்கம், பயனாளர், செயல்திறன். மத்திய அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு, கட்டாயம் ஆகிறது. காலை 9:15-க்குள் வரத் தவறினால், அரை நாள் தற்செயல் விடுப்பாகக் கொள்ளப்படும்
முன்னர் குறிப்பிட்டதில் 2 அம்சங்கள் - நோக்கம், பயனாளர் - தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதனை முறையாக முழுமையாகச் செயல்படுத்த சாத்தியக் கூறுகள்..? பயோமெட்ரிக் வருகைப் பதிவு...
உலக அரங்கில் கால்பதிக்கும் இந்திய பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி பாராட்டு
admin - 0
உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களை லண்டனை சேர்ந்த ‘டைம்ஸ் மேல் படிப்பு தரவரிசை நிறுவனம்’ பட்டியலிடுகிறது.
இந்த நிறுவனத்தின் சர்வதேசவிவகாரப் பிரிவு தலைமை அதிகாரி பில் பாட்டி விடுத்துள்ள செய்தியில், “டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசை பட்டியலில் இடம் பெறும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நரேந்திர மோடி மேற்கொள்ளும் உலகளாவிய சீர்திருத்தமே காரணம்.
கடந்த 2017-ம் ஆண்டில், டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் 42...










