காஷ்மீர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கும் திட்டம்: குமரியில் இருந்து கடைக்கோடி வரை ரயிலில் பயணிக்கும் காலம் கனிந்தது
admin - 0
இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள...
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்....
பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிப்பதற்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தை வாரியம் கட்டுப்படுத்துகிறது. அதேநேரம் பரஸ்பர நிதி திட்டங்களை ஊக்குவிக்க பரஸ்பர நிதி சங்கம் (ஆம்பி) செயல்படுகிறது. இதுபோல, தேசிய ஓய்வூதிய நிதியை (என்பிஎஸ்) நிர்வகிக்கும் நிறுவனங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) கட்டுப்படுத்துகிறது.
இந்நிலையில், மும்பையில் ‘ஒய்வூதியத்துடன் எதிர்காலத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நேற்று...
புனே, பெங்களூரு, ஹைதராபாத்துக்கு மக்கள் குடிபெயரும் அபாயம் உள்ளது: இன்போசிஸ் நாராயணமூர்த்தி எச்சரிக்கை
admin - 0
உலகளவில் பருவ நிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாகி வருகிறது என்று ஏற்கெனவே இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கவலை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாராயணமூர்த்தி கூறியதாவது: பருவ நிலை மாற்றம் குறித்த பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் வாழ தகுதியற்ற சிறு நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் புனே, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு குடிபெயரும் அபாயம்...
கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் மோதி தாக்குதல்: ஜெர்மனியில் காயமடைந்த 7 இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவி
admin - 0
ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை மோதி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.
ஜெர்மனியின் மேக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, மிகப்பெரிய ஷாப்பிங் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலையில் செல்வோர் மீது மோதியபடி நிற்காமல் சென்றது. இதில் குழந்தை உட்பட 5...
காஷ்மீரில் 40 நாள் கடும் குளிர் காலம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஸ்ரீநகரில் கடந்த வெள்ளி இரவு வெப்ப நிலை மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது கடந்த 50 ஆண்டுகளில் மிக குறைவான வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடும் குளிர் காலம் தொடங்கும். இது 40 நாட்கள் நீடிக்கும். இந்த கடும் குளிர் காலம் காஷ்மீரில் நேற்று முன்தினம் தொடங்கியதாக...
மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நிறைவு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார்.
இந்நிலையில் என்.டி.ராமாராவின் மகன் மோகனகிருஷ்ணா, என்டிஆர் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் ஜனார்தன், உறுப்பினர் மதுசூதனராஜு ஆகியோர் ஹைதராபாத்தில் தெலங்கானா அமைச்சர் நாகேஸ்வர ராவ், முதல்வர் ரேவந்த்...
உ.பி.யின் சம்பலில் 150 ஆண்டுகள் பழமையான 400 சதுர மீட்டர் பரப்பளவிலான படிகிணறு இருப்பது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரின் சந்தவுசி பகுதியில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் களஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. கள ஆய்வின்போது வன்முறை வெடித்தது.
இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது...
வங்கதேசத்தினர் ஊடுருவல்: டெல்லி போலீஸ் நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் 170 பேர் சிக்கினர்
admin - 0
டெல்லியில் போலீஸார் நடத்திய சோதனையில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 170 பேர் சிக்கினர். இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
டெல்லியின் பல பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த பலர் எந்த ஆவணமும் இன்றி தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து போலீஸார், வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி போலீஸார் மற்றும் வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள்...
குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டுக்கு சென்றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்டியில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து பேசினார். இந்திய தொழிலாளர்களுக்கு அவர்...









