வங்கதேசத்தில் நடத்தப்படும் இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வங்கதேச நாட்டு மக்களுக்கு 685 முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்குள்ள இந்து கோயில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வங்கதேசத்தில் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்று...
டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஆம் ஆத்மி அரசு மீது குற்றப்பத்திரிகையை வெளியிட்டது பாஜக.
டெல்லியில் கடந்த 10 ஆண்டு களாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியுடனோ இணைந்து போட்டியிட மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம் என்று கேஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம்...
அயோத்தி ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழாவை ஜனவரி 11 முதல் 3 நாள் கொண்டாட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதனை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு...
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் தோமாலகூடா பகுதியில் நகை கடை வைத்திருந்தார் இந்திரஜித். சில தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளான இவர், வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இவரது அண்ணனோ வேறொரு இடத்தில் நகை கடை வைத்து அதனை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். இதனால், தம்பி இந்திரஜித்துக்கு தனது அண்ணனைப் பார்த்து பொறாமை ஏற்பட்டது. எப்படியாவது அவனை நடுத்தெருவுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டம் தீட்டினார்.
இதன்படி,...
திரிபுரா புரு பழங்குடியினருடன் அமைச்சர் அமித் ஷா சந்திப்பு: அரசு திட்டங்கள் குறித்து விசாரித்தார்
admin - 0
திரிபுராவில் புலம் பெயர்ந்து வசிக்கும் புரு பழங்குடியின மக்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கிறதா என கேட்டறிந்தார்.
மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா திரிபுரா கடந்த 21-ம் தேதி சென்றிருந்தார். தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து, 22-ம் தேதி தலாய் மாவட்டத்தில் புருஹ பாரா கிராமத்துக்கு சென்ற அவர், அங்கு...
அம்பேத்கர் பற்றிய அமித் ஷா கருத்தில் நிதிஷ் மவுனம்: பிஹாரில் மீண்டும் கூட்டணி மாறுவதாக சர்ச்சை
admin - 0
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத் கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது. அவரது பேச்சை எதிர்க்கட்சியினர் கண்டித்து வருகின்றனர். அதேநேரத்தில், அமித் ஷா கருத்துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள்கள் ஆதரவாக பேசி வரு கின்றனர். மேலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அமைதி காக்கிறார். இதனால் அவர் மீண்டும் கூட்டணி மாறுவாரா என்ற கருத்து எழுந்துள்ளது.
பிஹாரில் என்டிஏ தலைமை கட்சியாக...
தற்கொலையை தடுத்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு ரூ.9.91 லட்சம் செலுத்த விவசாயிக்கு நோட்டீஸ்
admin - 0
ராஜஸ்தானில் விவசாயி ஒருவரின் தற்கொலையை தடுத்து, பாதுகாப்பு வழங்கியதற்காக ரூ.9.99 லட்சம் கட்டணம் செலுத்த அந்த மாநில காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டம், கோத்டா பகுதியில் சிமென்ட் ஆலை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு அனுமதி வழங்கியது. இந்த இடத்தில் விவசாயி வித்யாகர் யாதவ் குடும்பத்துக்கு சொந்தமான பூர்விக வீடு மற்றும் வயல் அமைந்துள்ளது.
வீடு, வயலுக்காக சிமென்ட் ஆலை தரப்பில்...
மூன்று இளைஞர்களை திருமணம் செய்து ரூ.1.25 கோடி சுருட்டிய சீமா அகர்வால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர், திருமண வரன் தேடும் இணையத்தில் சுயவிவரங்களை பதிவு செய்திருந்தார். இந்த இணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சீமா அகர்வால் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் சமூக வலைதளங்கள், செல்போன் வாயிலாக காதலை வளர்த்தனர்.
சீமா அகர்வாலின் அழகு,...
பெங்களூருவில் உள்ள ஜிகே விகே லே அவுட்டை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினீயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 38 வயதான இவருக்கு கடந்த நவ. 28-ல் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், டெல்லியில் உள்ள இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும் உங்களது எண்ணை தவறாக பயன்படுத்தி சட்ட விரோத விளம்பரம், பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் ஆகியவை விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மீது மும்பை போலீஸார்...
இளைஞர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம்: 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதன்மூலம் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் வரை 7 லட்சம் பேருக்கு அரசு பணி...









