இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 99% நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இரு தரப்புக்கும் இடையே தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் பிறகு நிரந்தர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் இரு நாடுகளும் அறிவித்தன.
இந்நிலையில் இந்தியா...
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தை அந்த கட்சியின் 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த சூழலில் திரிணமூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.
இதன்படி கொல்கத்தாவில்...
தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் கடந்த மே 22, 27-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் -ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர்,...
நீட் மறுதேர்வை கணினி வழி முறையில் நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய சூழலில் தேர்வு முறையை மாற்றுவது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறி நிராகரித்தது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பிஹார், கேரளம்,...
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங் பிரதமர் மோடியைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அதிக ஒத்துழைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களிடம்...
ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று மதியம் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கியது.
பிகானேர் பகுதியில் நேற்று மதியம் வீசிய புழுதிப் புயலில், பகல் நேரம் இருள் போல காட்சியளித்தது. மிகப்பெரிய மஞ்சள் புழுதிப் புயல் நகரத்தை நோக்கி முன்னேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த புழுதிப் புயல் காரணமாக பிகானேரின் முக்கிய சாலைகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்கு காட்சித் திறன் கடுமையாக பாதித்தது. மஞ்சள் நிற...
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக டெல்லியைச் சேர்ந்த நயாதி ஹெல்த் கேட் மற்றும் ஆக்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அதன் சேர்மேன் நீரா ராடியா ரூ.1.13 கோடி மதிப்பிலான பேட்டரி பேருந்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக வழங்கினார்.
மேலும், ஏஐ கமாண்ட் கண்ட்ரோல் அறையில் உபயோகிக்க 15 ஆப்பிள் நிறுவன ‘டேப்’-களையும் நன்கொடையாக வழங்கினார். திருமலையில் 20 இலவச பேருந்துகள் உள்ளதாகவும், அதில் 14 எலக்ட்ரிக் பேருந்துகள் எனவும் ‘தர்ம...
ஆந்திராவில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் சாலையில் கிடந்த பையை கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், மன்டபேட்டா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம் ராஜு என்பவரின் மகள் ஸ்ரீலேகா, தனது குடும்பத்தாருடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக லக்கவரம் கிராமத்துக்கு ஆட்டோவில் சென்றார். திருமண வீட்டுக்குச் சென்ற ஸ்ரீலேகா, தன்னிடமிருந்து ஒரு பையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மன்டபேட்டா காவல் நிலையத்தில்...
நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் ஆகிய 4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள் டிஜிட்டல்...
வியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவுக்கும் இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் (ஒலியை விட அதிவேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது அவர் இதுகுறித்து கூறுகையில், ‘‘வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பொதுவெளியில்...










