கொல்கத்தாவில் ஒரே நாளில் மம்தா, அதிருப்தி அணியினர் பேரணி

0
13

கொல்​கத்​தா​வில் ஒரே நாளில் திரிணமூல் காங்கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் ஒரு பேரணியும், திரிண​மூல் அதிருப்தி அணி​யினர் கலந்​து​கொண்ட பேரணி​யும் நடை​பெற்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்​தலில் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்கிரஸ் 80 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்று ஆட்​சியை இழந்​தது.

தேர்​தலுக்​குப் பின்​னர் மம்தா தலைமை மீது அதிருப்தி கொண்ட 58 எம்​எல்​ஏக்​கள் கட்​சியி​லிருந்து விலகி தனி அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர். அதைப் போலவே மக்​களவை​யில் இருந்த 28 திரிண​மூல் காங்​கிரஸ் எம்.பி.க்​களில் 20 பேர் கட்சியிலிருந்து விலகி இந்​திய தேசிய குடிமக்​கள் கட்​சி​யில் இணைந்து தனி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர்.

ஆட்​சி​யை​யும் இழந்​து, கட்சி எம்​எல்​ஏக்​கள், எம்​பிக்​கள் பலரை​யும் இழந்​துள்ள மம்தா பானர்​ஜி, கட்​சியை மறுசீரமைக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் 1993-ல் கலவரத்​தில் உயிரிழந்த 13 இளைஞர் காங்​கிரஸ் கட்சி நிர்​வாகி​களின் நினைவாக ‘ஷாஹித் திவஸ்’ என்ற பேரணியை கொல்​கத்​தா​வில் நேற்று பிர்லா கோளரங்​கம் அருகே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிண​மூல் காங்​கிரஸார் நடத்​தினர்.

அதேநேரத்​தில் மகாத்மா காந்தி சிலை அரு​கே, அதிருப்தி திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யினரும் இது​போன்ற தியாகி​கள் தின பேரணியை நடத்​தினர். இரண்​டுமே ஒரே நேரத்​தில் நடை​பெற்​ற​தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. ஆனால் இரு பேரணி​கள் நடந்த இடத்​தி​லும் போலீ​ஸார் குவிக்​கப்​பட்டு இருந்ததால் அங்கு பிரச்​சினை ஏதும் ஏற்​ப​டா​மல் சுமூக​மாக முடிவடைந்​தது. மேலும், காங்​கிரஸ் கட்சி சார்​பிலும், நினைவேந்தல் பேரணி நேற்று கொல்​கத்​தா​வில் நடை​பெற்​றது.

பேரணி​யில் கலந்​து​கொண்ட திரிண​மூல் தொண்​டர்​களிடையே மம்தா பேசி​ய​தாவது: நமது கட்​சியி​லிருந்து விலகி செயல்​படும் கட்சி நிர்​வாகி​கள் திருடர்​கள். அவர்​களை மன்​னிக்​கவே கூடாது. நமது கட்​சியி​லிருந்து பிரிந்து பாஜக​வில் இணைந்​தவர்​கள் தைரியமற்ற கோழைகள். அவர்​களுக்கு தைரி​யம் இருந்​தால், பாஜக​வில் இணைந்த பின்​னர் தேர்​தலில் போட்​டி​யிட வேண்​டும். திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி சின்​னத்​தில் வெற்றி பெற்​று​விட்டு முதுகில் குத்​திய துரோகி​களை நான் மன்​னிக்​க மாட்​டேன். இவ்வாறு அவர்​ பேசி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here