வரு​மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு திருப்பதி தேவஸ்​தான அதிகாரி லோக​நாதம் கைது

0
17

திரு​மலை திருப்பதி தேவஸ்​தானத்​தின் இணை நிர்வாக அதி​காரி லோக​நாதத்​தை, வரு​மானத்​திற்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​த​தாக திருப்​பதி லஞ்ச ஒழிப்புத் துறை அதி​காரி​கள் நேற்று காலை கைது செய்​தனர். மேலும், இவர் கலப்பட நெய் விவகாரத்​தி​லும் ரகசி​ய​மாகத் தொடர்​பில் இருந்​தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்​துள்​ளது.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில், ஏழு​மலை​யான் கோயில் வளாகத்​திற்​குள் இணை நிர்​வாக அதி​காரி​யாகப் பணி​யாற்றி வருபவர் லோக​நாதம். இவர் கடந்த ஒய்​.எஸ்​.ஆர். காங்​கிரஸ் ஆட்சிக் காலத்​தில் இருந்தே உயர் அதி​காரி​யாக முக்​கியப் பங்கு வகித்து வந்​தார்.

கலப்பட நெய் விவ​காரத்​தில் சி.பி.ஐ. விசா​ரணை நடத்​தி, அதன் அறிக்​கையை மத்​திய மற்​றும் மாநில அரசுகளுக்​குச் சமர்ப்பித்தது. அந்த அறிக்​கை​யில், கலப்பட நெய் வழக்​கில் ஒப்பந்​த​தா​ரர்​கள் மட்​டுமின்றி சில தேவஸ்​தான அதிகாரிகளுக்கும் பங்கு இருப்​பது அரசுக்​குத் தெரியப்படுத்தப்பட்​டது.

இதனைத் தொடர்ந்​து, அவ்​வழக்​கில் நடவடிக்கை எடுக்​கும் விதமாக, ஏற்​க​னவே திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதிகாரியாக இருந்த அணில்​கு​மார் சிங்​கால் அப்​ப​த​வி​யில் இருந்து பணிமாற்றம் செய்​யப்​பட்​டார். மேலும் சில அதிகாரிகளும் இதில் ரகசியமாக ஈடு​பட்​டுள்​ளனர் எனும் தகவல் பரவலாகப் பேசப்பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை ஏழு​மலை​யான் கோயில் இணை நிர்​வாக அதி​காரி​யான லோக​நாதத்​தின் வீடு உட்பட 5 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் அதிரடிச் சோதனை மேற்​கொண்​டனர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து நடத்​தப்​பட்ட இச்​சோதனை​யில், ரூ.5 கோடிக்கும் அதி​க​மான அசையா சொத்​துக்​கள், 2 கிலோ தங்க ஆபரணங்​கள், 6.5 கிலோ வெள்​ளிப் பொருட்​கள் மற்​றும் ரூ.12 லட்சம் ரொக்​கம் போன்​றவை பறி​முதல் செய்​யப்​பட்​டன.

சாதாரண ஊழிய​ராகச் சேர்ந்து படிப்​படி​யாக உயர் பதவிக்​குச் சென்ற லோக​நாதத்​திற்கு இவ்​வளவு சொத்​துக்​கள் எவ்​வாறு வந்தன எனும் கேள்வி எழுந்​துள்​ளது. இந்​நிலை​யில், நேற்று காலை லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் தேவஸ்​தான அதி​காரி லோக​நாதத்​தைக் கைது செய்​து, நெல்​லூர் லஞ்ச ஒழிப்பு நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​த அழைத்துச் சென்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here