எப்சிஆர்ஏ மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு நியமனம்

0
18

வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 பேர் அடங்​கிய நாடாளு​மன்ற கூட்​டுக் குழு நியமனம் செய்​யப்​பட்டு உள்​ளது. கடந்த 1976-ம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​ முறை) சட்டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2010-ம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யில் இந்த சட்​டத்​தில் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டன.

கடந்த 2020-ம் ஆண்​டில் பிரதமர் நரேந்​திர மோடி ஆட்​சி​யில் மேலும் கடுமை​யான விதி​கள் எப்​சிஆர்ஏ சட்​டத்​தில் சேர்க்கப்பட்டன. தற்​போது மேலும் 3 முக்​கிய திருத்​தங்​கள் செய்யப்​பட்டு கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் சட்ட திருத்த மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது. கடந்த மழைக்​கால கூட்​டத் தொடரில் மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு முயற்சி செய்தது.

ஆனால் எதிர்க்​கட்​சிகளின் ஆட்​சேபத்​தால் நாடாளு​மன்ற கூட்​டுக் குழு பரிசீலனைக்கு மசோ​தாவை அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டது. இதன்​படி 31 பேர் அடங்​கிய நாடாளு​மன்ற கூட்​டுக் குழு நேற்று அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வுக்கு பாஜக எம்பி சஞ்​சய் ஜெய்ஸ்வால் தலைமை வகிப்​பார். எப்​சிஆர்ஏ சட்ட திருத்த மசோதா குறித்து கூட்​டுக் குழு ஆய்​வு செய்து தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here