Google search engine

இரணியல்: வீட்டில் நகை, குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டில் வைத்திருந்த பித்தளை குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கடந்த 18ஆம் தேதி திடீரென காணவில்லை. இதைக் குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நேற்று (நவம்பர் 6) இரணியல் போலீசார் மணக்கரை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது...

பத்மநாபபுரம்: வரிப்பணம் சுருட்டல்.. பெண் காசாளர் பணியிடை நீக்கம்

பத்மநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் நகராட்சி மக்கள் பல்வேறு வகை கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கணினி மூலம் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக வசூல் ஆகும் தொகையை அலுவலகத்தில் செலுத்துவதில் குளறுபடி இருந்தது....

இரணியல்: வீட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகை மாயம்

இரணியல் அருகே காற்றாடி மூடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (55). நாகர்கோவில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குருந்தன்கோடு பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகள் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு...

வள்ளவிளை: 2000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை அந்தோணியார் குருசடி பகுதியில் ஒரு சொகுசு வேனில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் உடன் நிற்பதாக கொல்லங்கோடு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த இடத்திற்கு கொல்லங்கோடு எஸ்.ஐ வில்சன் தலைமையான போலீசார் நேற்று (நவம்பர்...

ஒழுகினசேரியில் நகர் நல மையத்தை திறக்க மக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ. 60 லட்சம் செலவில் நகர் நல சுகாதார மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் கட்டிய நிலையிலேயே மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்டடத்தை திறந்து நகர் நல மையத்தை செயல்பட...

தக்கலை: போலீஸிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து தப்ப முயன்ற கைதி

அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜான் (39). ஆயுதப்படை தலைமைக் காவலரான இவர் நேற்று (5-ம் தேதி)  பாளையங்கோட்டை சிறையில் இருந்து போலீஸ்  வாகனத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் என்ற முத்தையா (25) என்பவரை நாகர்கோவில் கொண்டு வந்தார். பின்னர்  பத்மநாபபுரம்...

திருவட்டார்: திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரிப்பாய் (40). இவர் மீது குமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திருவட்டார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு  நடந்த திருட்டு வழக்கில் போலீசார் இவரை...

நித்திரவிளை: மாணவர்களுக்கு  கஞ்சா விற்ற 2 பேர் கைது

நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று (5-ம் தேதி) மாலையில் விரி விளை அருகே உள்ள கணபதியான்கடவு  பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை  போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, அவர்கள்...

நித்திரவிளை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகள் ஷாலு (17). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக கடந்த 27ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று (5-ம் தேதி)...

நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய நர்சை சில வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும், இரவு பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம். ஆர். பி....