திருவட்டார்: திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

0
88

புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரிப்பாய் (40). இவர் மீது குமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் திருவட்டார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு  நடந்த திருட்டு வழக்கில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற வாய்தாவுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனால் அவரை பிடிக்க பத்மநாபபுரம்  குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. போலீசார் அவரை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ( 4-ம் தேதி) இரவு  இளங்கடை பகுதியில் பதுங்கி இருந்த ரிப்பாயை  திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here