அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜான் (39). ஆயுதப்படை தலைமைக் காவலரான இவர் நேற்று (5-ம் தேதி) பாளையங்கோட்டை சிறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் என்ற முத்தையா (25) என்பவரை நாகர்கோவில் கொண்டு வந்தார். பின்னர் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கு ஆஜர் படுத்துவதற்காக அரசு பஸ்ஸில் தக்கலைக்கு அழைத்து வந்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் தக்கலை பஸ் நிலையம் வந்தனர். அப்போது டேவிட் ஜானிடம் ரசூல் முத்தையா பீடி வாங்கி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ரசூல் முத்தையா தனக்கு பீடி தரவிட்டால் கைகளை அறுத்து சாலையில் வாகனத்தில் மோதி தற்கொலை செய்வேன் என மிரட்டியுள்ளார்.
அப்போது அந்த வழியாக ரசூல் உறவினரான மதுரை சேர்ந்த தனுஷ் என்பவர் பைக்கில் வந்துள்ளார். தனுசும் டேவிட் ஜானிடம் தகராறு செய்துள்ளார். இதற்கிடையில் ரசூல் முத்தையா தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் போலீஸார் அவரை பிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ரசூல் முத்தையா மற்றும் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.