நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று (5-ம் தேதி) மாலையில் விரி விளை அருகே உள்ள கணபதியான்கடவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.
தொடர்ந்து அவர்களை சோதனையிட்ட. போது கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. தவிசாரணையில் இவர்கள் புதுக்கடை பகுதி பைங்குளத்தை சேர்ந்த அஜித்குமார் (28), அர்ஜுன் சிங் (31) என்பதும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கடத்தி வந்ததாகவும் தெரிய வந்தது.
அவர்களை கைது செய்து 800 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் போன்றலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.