திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய நர்சை சில வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும், இரவு பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம். ஆர். பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜிஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், சி. ஐ. டி. யு. இந்திரா, ஹேமலதா, மாநில செயலாளர் சுபின், மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன், அனைத்திந்திய மாதர்சங்கம் மாநில துணை தலைவர் உஷாபாசி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்டிப்னி நன்றி கூறினார்.
Latest article
மணவாளக்குறிச்சி: வீட்டு பீரோவின் அடியில் பதுங்கிய பாம்பு
மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி சியாமளா (55). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் வெளியூரில் உள்ளனர். பாஸ்கரன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சியாமளா மட்டும் தனியாக வசித்து...
கருங்கல்: பேருராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள்...
சூசைபுரம்: புனித அல்போன்சா கல்லூரி மாணவர்கள் சாதனை
மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் மணல் ஆலை சார்பில் 2024 ஆம் ஆண்டின் விழிப்புணர்வு வாரத்தை கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள் மணல் ஆலையில் நடைபெற்றது.
போட்டிகளில்...