கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கிருஷ்ணன்கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வ. ஊ. சி. தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 65) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.