சூரியின் ‘மண்டாடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
19

சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக் ஷன் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

கடலின் பிரமாண்டமான பின்னணியிலும், பரபரப்பான படகுப்பந்தய உலகத்தையும் மையமாகக் கொண்டு நகரும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப். 4-ம் தேதி வெளியாகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here