அவன் யார்ங்குற ஆர்வம்தான் ‘ஜான் டோ’ – இயக்குநர் மதுமிதா நேர்காணல்

0
10

தமி​ழில், ‘வல்​லமை தாராயோ’, ‘கே.டி.என்​கிற கருப்​புதுரை’, இந்​தி​யில் ‘காளிதர் லாபதா’ உள்​பட சில படங்​களை இயக்கி யிருக்​கும் மது​மிதா, இரட்டை மகிழ்ச்​சி​யில் இருக்​கிறார் இப்​போது. அவர் இயக்கி இருக்​கும் ‘லவ் ஆல்​வேஸ்’ என்ற வெப் தொடர், ஜியோ ஹாட்​ஸ்டாரில் வெளியாகி இருக்​கிறது. அடுத்து அவர் இயக்கி இருக்​கும் ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்​கிறது. புரமோஷனில் பிசி​யாக இருந்த மது​மிதாவிடம் பேசினோம்.

Q

ஒரே நேரத்​துல வெப் சீரிஸ், திரைப்​படம் என்று ரெண்டு ரிலீஸ்… எப்​படி​யிருக்கு?

A

ரெண்​டுமே ஒரே நேரத்​துல வெளியாகறது மகிழ்ச்​சியா இருக்கு. இது எதேச்​சையா அமைஞ்​சது​தான். பொதுவா 20, 25 வயசு இளம் வயசுக்​காரங் களுக்​கான ரொமான்ஸ்​தான் பேசப்​படுது. ஆனா, 60 வயசு ஜோடிக்​கும் ரொமான்ஸ் இருக்​குமில்ல; அதாவது அதோட பார்வை, வெளிப்​பாடு வேற வகையா இருக்​கும். எடுத்​துக்​காட்டா, கணவன் – மனைவி தீவிரமா சண்​டைப் போட்​டுட்டு இருக்​கும் போது, கணவனுக்கு இருமல் வருது, அப்ப மனைவி தண்​ணீர் பாட்​டிலை எடுத்​துக் கொடுத்தா, அது​வும் ஒரு வகை​யான ரொமான்ஸ்தானே.

அந்த மாதிரி ஒரு 60 வயது ஜோடி, 20 வயசானவங்​களா மாறிடறாங்க, அப்ப என்ன மாதி​ரியான மேஜிக் நடக்​குதுங்​கறது​தான் ‘லவ் ஆல்​வேஸ்’ வெப் தொடரோட கான்​செப்ட். அத​னாலதான் இதை மேஜிக்​கல் ரொமான்​டிக் காமெடின்னு சொல்​லி​யிருக்​கோம். கொஞ்​சம் புதுசா இருக்​கும். இந்த தொடருக்கு வர்ற விமர்​சனங்​கள் பாசிட்​டிவா இருக்கு. இது கொரியால ஹிட்​டான ‘ஹியர் வி கோ அகைன்’ அப்​படிங்​கற வெப் டூன் பாதிப்​புல உரு​வாக்​குன கதை இது. மொத்​தம் 8 எபிசோட். தமிழ், தெலுங்கு, இந்தி உள்​பட இந்​திய மொழிகள்ல வெளியாகி இருக்கு.

Q

கொஞ்​சம் இடைவெளிக்​குப் பிறகு தமிழுக்கு வந்​திருக்​கீங்க…

A

இடைவெளின்னு சொல்ல முடி​யாது. நான் இயக்​கிய ‘கே.டி’ படத்​தோட ரீமேக்-கை இந்​தி​யில பண்​ணினேன். அபிஷேக் பச்​சன் முதன்மை வேடத்​துல நடிச்​சார். அதுல பிசியா இருந்​ததால உடனடியா தமிழ்ல படங்​கள் பண்​ணல. இப்ப இந்த வெப் தொடரை​யும் ‘ஜான் டோ’ படத்​தையும் தமிழ்​லதான் பண்ணியிருக்கேன்.

Q

‘ஜான் டோ’ சைக்​காலஜிக்​கல் த்​ரில்​லர்னு சொன்​னாங்​களே?

A

ஆமா. ​இது கேரளா – தமிழ்​நாடு பார்​டர்ல நடக்​கிற கதை. ஒரு உடல் கேரளா பார்​டர்ல கண்​டு​பி​டிக்​கப் படுது. அதன் பின்​னணி​யில நடக்​கிற கதைதான் படம். ‘மகாராஜா’ மாதிரி ரெண்டு கதை மாறி மாறி நடக்​கும். எந்த இடத்​துல ரெண்​டும் இணை​யுதுங்​கறது​தான் படம். அர்​ஜுன் தாஸ் முதன்​முறை​யாக போலீஸ் கேரக்​டர்ல நடிச்​சிருக்​கார்.

போலீஸ்னா, வழக்​க​மான போலீஸ் கேரக்​டரா இருக்​காது. ஹீரோயிசம் இல்​லாத போலீஸ் அதி​காரி. சஞ்​சனா நடராஜனும் போலீஸ் அதி​காரியா வர்​றாங்க. அவங்​களும் வழக்​க​மான போலீஸா இருக்​க​மாட்​டாங்க. அப்​புறம் சிருஷ்டி, ஜாரா… இன்​னும் நிறைய பேர் நடிச்​சிருக்​காங்க. இது சைக்​காலஜிக்​கல் த்​ரில்​லர் படம்​தான். ஜாரா ஒரு 17 வயது டீன்- ஏஜ் பெண்ணா வர்​றாங்க. எல்​லாருமே அவங்​கவங்க கேரக்​டருக்கு ரொம்ப பொருத்​தமா இருப்​பாங்க.

Q

நிறைய த்​ரில்​லர் படங்​கள் வருது… அதுல இருந்து இது எப்​படி வித்​தி​யாசப்​படுது?

A

அதை இப்​பவே சொல்ல முடி​யாது. சொன்னா, சஸ்​பென்ஸ் போயிடுமே! ஆனா, கண்​டிப்பா வித்​தி​யாச​மான ட்​ரீட்​மென்டா இருக்​கும். நானும் ஸ்கி​ரிப்ட் ரைட்​டர் நிக்​கோலஸ் செவாலியரும் சேர்ந்து கதை, திரைக்​கதை எழுதி இருக்​கோம். ‘நான் இதுக்​குலாம் தகுதி​யானவனா?

நான் சரியான மகனா, மகளா? சரியான மனைவியா?’ன்னு பொதுவா எல்​லாருக்​குள்​ளயும் ஒரு கேள்வி இருக்​கும்ல. அந்த கேள்​விதான் இந்​தப் படம். ‘பாகுபலி’யை தயாரிச்ச அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிச்​சிருக்​காங்க. கண்​டிப்பா இந்​தப் படம் புது அனுபவத்தை தருங்​கறது என் நம்​பிக்கை.

Q

‘ஜான் டோ’ -ன்னா என்ன?

A

‘ஜான் டோ’ – ங்கறது கேரக்​டரோட பெயரில்லை. அது அடை​யாளம் தெரியாத அல்​லது உறுதிப்​படுத்த முடி​யாத ஒரு​வரைக் குறிக்​கிற சொல். அத​னாலதான் ‘அவன் யார்?’ அப்​படிங்​கற டேக் லைன் வச்​சிருக்​கோம். ​அது பாதிக்​கப்​பட்​ட​வரா இருக்​கலாம், போலீஸா இருக்​கலாம், அல்​லது யாராகவும் இருக்​கலாம். ‘அவன் யார்?’ ங்கற ஆர்​வம் தான் ஜான் டோ.

Q

மலை​யாள ‘அங்​க​மாலி டைரீஸ்’ படத்தை இந்​தி​யில ரீமேக் பண்​றதா சொல்லி இருந்​தீங்​களே?

A

அது ரீமேக் இல்லை. அந்​தப் படத்​தோட தழு​வல்னு சொல்​லலாம். ​அர்​ஜுன் தாஸ் ஹீரோவா பண்​ணி​யிருக்​கார். படப்​பி​டிப்பு ஏற்​கெனவே முழு​மையா முடிஞ்​சிடுச்சு. இப்ப போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் போயிட்டு இருக்கு. ​அடுத்த ஆண்டு தொடக்​கத்​துல படம் வெளியாகும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here