நித்திரவிளை:   கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ

நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் நேற்று (பிப்ரவரி 14) இரவு 9 மணி அளவில் கிராத்தூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே பயணிகள் ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது.  போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ...

நாகர்கோவிலில் எஸ். டி. பி. ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்பு திருத்த சட்ட மசோதா நேற்று (பிப்.13)  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்பிக்...

நாகர்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்க பயிற்சி பட்டறை

தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை. நலவாரியங்களை கொண்டு வருவதிலும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய சி.ஐ.டி.யு ஸ்தாபகர்களில் ஒருவரான பாலாநந்தனின் 100வது நினைவு நாளை முன்னிட்டு தொழிற்சங்க பயிற்சி பட்டறை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு மாநில துணை பொது செயலாளர்...

மண்டைக்காடு: கோவில் திருவிழா; எஸ்.பி நேரில் ஆய்வு

குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 2-ஆம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.  ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 88-வது சமய...

கருங்கல்:  மின்கம்பத்தில் மோதிய லாரி ; பொதுமக்கள் மடக்கினர்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில்  தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்ற டிரைவர் கீழ்குளம் பகுதியில் ஜல்லி ஏற்றி கொண்டு வந்துள்ளார். ஜல்லி இறக்கிவிட்டு நாகர்கோவில்  நோக்கி புறப்பட்டார்.  ...

தக்கலை: அடுத்தவர் மனைவியை அபகரித்த ஏட்டு.. புகார்

தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரி ஓட்டுநர். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளறடை பட்டினத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 16 வயதில் மகளும் 11 வயதில் மகனும் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2022...

மார்த்தாண்டம்: சாலை சீரமைக்க வர்த்தகர்கள்  அமைச்சரிடம் மனு

மார்த்தாண்டம் சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலைகள் குண்டு குழியாக படுமோசமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மழைநீர் சாலை வழியாக பாய்ந்து சாலையின் இரு புறங்களில் உள்ள கடைகளில் புகுந்து கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.  மார்த்தாண்டம் பகுதி சாலைகளை விரிவாக்கம் செய்து, வடிகால் வசதியுடன் சீரமைக்க...

பொன்மனை: புலி நடமாட்டம் – சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே குரங்குகள், கரடிகள், பாம்புகள், மிளகாய், காட்டு யானைகள் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இப்போது புலி தொல்லையும் ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வேளிமலை தோட்ட தொழிலாளர்கள் வேலை...

கொல்லங்கோடு:  அதிக குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ மீது நடவடிக்கை

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியில் தமிழக பதிவு கொண்ட பயணிகள் ஆட்டோவில் அதிகமான மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்றது குறித்து செய்திகள் வெளியானது.  இது போன்ற சம்பவங்கள் மீனவ கிராமங்களில் வாடிக்கையாக நடந்து வருவதாகவும், உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்றும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம்...

நித்திரவிளை:  மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

நித்திரவிளை அருகே மேலமட விளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). கொத்தனார். இவருடைய மனைவி விஜயராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர். மதுபோதையில் இருக்கும் போது தனக்கு வாழ பிடிக்கவில்லை என அவர் கூறுவாராம்.  இந்த நிலையில்...