தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி வீட்டுக்கு செல்ல மறவன் குடியிருப்பு என்ற பகுதிக்கு பைக்கில் புறப்பட்டுள்ளார். பைக் தோட்டியோடு பகுதியில் செல்லும் போது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பைக்கை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது பைக் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட சுபாஷுக்கு உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து பின்னர் களியங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுபாஷ் தாயார் ஜெயந்தி என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ராஜேஸ்வரன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.