தீயணைப்பு துறையில் பணியின் போது மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து நேற்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.