குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அஜித்குமார், தெற்கு ஒன்றிய அமைப்பாளர் மதன்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசும்போது, ‘ஆதிதிராவிடர் நல அணி மக்கள் பணியில் சிறந்து செயல்பட வேண்டும். தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறி அவை மக்களுக்கு சென்றடைய பணிகள் மேற்கொள்ள வேண்டும். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி இன்று (திங்கட்கிழமை) அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த அனைவரும் திரளாக வரவேண்டும்’ என்றார். கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.