நாளை சித்திரை 1ம் தேதி கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோயில்கள் மற்றும் வீடுகளில் பூஜைக்காகவும் கனி காண்பதற்காகவும் வாழைத்தார்கள் வாங்கப்படுவது வழக்கம். நாகர்கோவில் சந்தையில் இன்று வாழைத்தார்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது; வழக்கமாக ரூ. 150க்கு விற்கப்படும் கதலி வாழைத்தார் இன்று ரூ. 350க்கு விற்பனையானது.