சித்திரை ஒன்றாம் தேதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று சித்திரை புத்தாண்டுயொட்டி நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் பல்வேறு வகை காய் வைக்குப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகராஜரை காய்கனிகள் மூலம் வடிவமைத்து வைத்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்ததுடன் நாகராஜரையும் வழிபட்டு சென்றனர்.