Google search engine

நாகர்கோவிலில் சாலையோர கடைகளில் திடீர் ஆய்வு செய்த மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெட்டூர்ணிமடம் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர உணவு கடைகளை மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வியாபாரிகளிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும்...

தேங்காபட்டணம்: திடீர் கடல் சீற்றம்; தடுப்பு சுவர் சேதம்

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பகுதியில் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையை தொட்டு முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை, சின்னத்துறை, இனயம் ஆகிய கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன.  இந்த கடற்கரை கிராமங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடலலை வீடுகளுக்குள் புகுவதும்,...

குளச்சல்: ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு

குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் நேற்று பீச்ரோடில் சவாரி சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறிய வாணியக்குடியை சேர்ந்த ஹெலன் என்பவர் இறங்கும் போது கையில் வைத்திருந்த 2.67 லட்சம் ரூபாய் பணத்தை...

அருமனை: பழமையான ஈட்டி மரம் வெட்டி கடத்தல்

அருமனை அருகே மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் தனியார் காட்டில் பழமையான ஈட்டி மரம் காணப்பட்டது. இந்த மரத்தை சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளர் பராமரித்து வந்தார். மேலும் ஈட்டி மரம் பாதுகாக்கப்பட்ட மரம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 14) காட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்...

திருவட்டார்: மின்வாரிய அலுவலகத்தில் படமெடுத்தாடிய பாம்பு

திருவட்டாறு அருகே வீயன்னூரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தின் ஒரு அறையில் நேற்று மாலையில் அலுவலர்கள் பணியில் இருந்தபோது திடீரென பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து அறைக்குள் வந்தது. இதை பார்த்தவுடன் அலுவலர்கள் பயத்தில் கூச்சலிட்டனர்.  உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்து மின்வாரிய அலுவலக ஊழியர்கள்...

கொல்லங்கோடு: ஆட்டோ டிரைவர் தற்கொலை

கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் காசிராஜன் (60) ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. காசிராஜ் நோய் பாதிப்பு உள்ளவராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை காசிராஜை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த...

இனயம் புத்தன்துறை: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் இனையம்-புத்தன்துறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இனையம், புத்தன்துறை, ஹெலன்நகர், இனையம்-புத்தன்துறை ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசிக்கின்றனர்.  இவர்களுக்கு 4067 வீடுகள் மற்றும் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊராட்சி...

கருங்கல்: கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது

கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (46). கான்ட்ராக்டர். இவர் கடந்த 6.3.2018 அன்று தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் கல்லூரிச் செல்லும் வழியில் கேலி செய்வதாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் கூறினார். பிரான்சிஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விட்டு...

நாகர்கோவிலில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

தீயணைப்பு துறையில் பணியின் போது மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து நேற்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார் மலர் வளையம்...

இரணியல்: ஐடி ஊழியர் சாலை விபத்தில் படுகாயம்

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி வீட்டுக்கு செல்ல மறவன் குடியிருப்பு என்ற பகுதிக்கு பைக்கில் புறப்பட்டுள்ளார். பைக்...