கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெட்டூர்ணிமடம் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர உணவு கடைகளை மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வியாபாரிகளிடம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும் சுகாதாரமாகவும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.