குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பகுதியில் தேங்காய்ப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையை தொட்டு முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை, சின்னத்துறை, இனயம் ஆகிய கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்த கடற்கரை கிராமங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடலலை வீடுகளுக்குள் புகுவதும், வீடுகளை இழுத்துச் செல்வது தொடர்கதையாக நடந்தது. தற்போது தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் கட்டுமான பணியை தொடர்ந்து ராமன்துறை, புத்தன்துறை போன்ற கடற்கரை கிராமங்களில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் கடல் கொந்தளிப்பு குறைந்து வீடுகளுக்குள் கடலலை புகுவதும் மிகவும் குறைந்து வந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) மாலையில் திடீரென ராமன்துறை, இனயம், சின்னத்துறை கடற்கரை கிராமங்களுக்குள் தடுப்புச்சுவரைத் தாண்டி கடலலை வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பல பகுதிகள் சேதம் அடைந்தன. உடனே மேற்படி மீனவ கிராமங்களை தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித்துறைமுக உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின், உதவி செயற்பொறியாளர் மகேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் இனயம்புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.