Google search engine

நட்டாலம்: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சியில் ஸ்டார் ஜங்ஷன் என்ற பகுதியில் அரசு டாஸ்மாக் கடை திறக்க போவதாக தகவல் பரவியது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த ஒரு பர்னிச்சர் கடையை ஒரே நாளில் காலி செய்துவிட்டு அந்த கடையின் உள்பக்கமாக பூட்டி கட்டுமான பணி நடந்து...

மார்த்தாண்டம்: டாஸ்மாக் பாரில் அதிகாரிகள் சோதனை

மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் டாஸ்மாக் கடையும் அருகே பாரும் உள்ளது. இந்த பாரில் காலாவதியான குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.  இதனைத் தொடர்ந்து நேற்று மேல்புறம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பிரவீன் ரகு, கிள்ளியூர் உணவு பாதுகாப்பு பயிற்சி அதிகாரி ஜெப்ரி மோள் ஆகியோர் தலைமையில்...

தேங்காப்பட்டணம்:   மீன்பிடித் துறைமுகம் கலெக்டர் பார்வை

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேரில் பார்வையிட்டார்.  பின்னர் அவர் கூறியதாவது: - தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை கள்ளக்கடல் ஏற்பட்டதால் பிரதான அலைதடுப்புச்சுவர் சேதமடைந்தது. சேதமடைந்த 75 மீட்டர் நீளமுள்ள பிரதான அலைதடுப்புச்சுவர்...

கிள்ளியூர்: மர்மமாக இறந்த வாலிபரின் உடல் அடக்கம்

கிள்ளியூர் அருகே மாங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் சஜின் (24). இவர் கடந்த 16ஆம் தேதி வேலைக்குச் சென்ற பின்னர் மாயமானார். 17ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அவரது தந்தை தேவராஜ் அளித்த புகாரின் பேரில் கருங்கல்...

திருவட்டார்: சாலையில் குவித்த டயர் கழிவுகள்

திருவட்டார் அருகே அம்பாங்காலை பகுதியில் இருந்து ஆறங்கோடு என்ற பகுதிக்கு சாலை ஒன்று செல்கிறது. நேற்று அதிகாலை இந்த சாலையில் டயர் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து பொதுமக்கள் திருவட்டார் பேரூராட்சி...

குழித்துறை: இளம் பெண்ணுக்கு ஜீவனாம்சம்; கோர்ட்டு உத்தரவு

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபிஜா ஷெரின் எம்.இ பட்டதாரி. பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாரோடு பகுதியைச் சேர்ந்த அஜய் சாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அபிஜா ஷெரின் பெற்றோரின் 101 தங்க நகைகளும் 4 லட்சத்து 50...

ஆற்றூர்: திமுக பொதுக்கூட்டம்;  நாஞ்சில் சம்பத் பங்கேற்பு

திருவட்டாரை அடுத்த ஆற்றூர் சந்திப்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன், உட்பட திமுக தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியதாவது: -...

புதுக்கடை: மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி கோணத்துவிளையை சேர்ந்தவர் தேவராஜ் (65). கார் டிரைவர். இவரது தோட்டத்தில் உள்ள மரங்கள் அதே பகுதியை சேர்ந்த குணமணி மகன் பிரிங்கோ ஸ்டான்லி வீட்டில் சாய்ந்து நிற்பதால் இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவ தினம் பிரிங்கோ ஸ்டான்லி...

திங்கள்சந்தை: பயணிகள் நிழற்குடையில் மோதிய கார்

திங்கள்சந்தையில் இருந்து அழகிய மண்டபம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று சொகுசு கார் ஒன்று சென்றது. ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி அருகில் வைத்து எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் பள்ளி முன்பு உள்ள பயணிகள் நிழற்குடையில்...

இரணியல்: தந்தை, மகளை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை

வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேற்கு சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் (50). டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராதாகிருஷ்ணன் (38) என்பவர் கடைக்கு வந்தார். பின்னர்...