மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் டாஸ்மாக் கடையும் அருகே பாரும் உள்ளது. இந்த பாரில் காலாவதியான குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று மேல்புறம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பிரவீன் ரகு, கிள்ளியூர் உணவு பாதுகாப்பு பயிற்சி அதிகாரி ஜெப்ரி மோள் ஆகியோர் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பார் சுமார் 30 நிமிடங்கள் மூடப்பட்டு சோதனை நடந்தது. அங்கு இருந்த குடிநீர் பாட்டில்களை சோதனை செய்தபோது காலாவதியானவை என்பதும், சுகாதாரமற்ற முறையில் அடைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 1000 குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கலர் பொடிகள், அன்னாசி பழங்கள், உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இது போன்ற உணவு பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் குழித்துறை நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ்குமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் கொண்டு அழிக்கப்பட்டது. பார் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.